News July 5, 2025
‘ஒன்றல்ல, 3 எதிரிகளை எதிர்கொண்டோம்’

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா, பாகிஸ்தான், துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக ராணுவ துணை தளபதி ராகுல் ஆர் சிங் தெரிவித்தார். துருக்கி பாகிஸ்தானுக்கு ஏராளமான ட்ரோன்களை வழங்கியது என்றும், பாக்., ராணுவ தளவாடங்களில் 81% சீனா ஹார்டுவேர்களே உள்ளதாகவும் கூறினார். மேலும் பாக்., உடனான மோதலின் போது, நமது ராணுவ நகர்வுகளை நிகழ்நேரத்தில் சீனா மூலம் பாக்., பெற்றதாக தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கெளரவம்

சினிமாவில் பொன்விழா கொண்டாடியுள்ள ரஜினிகாந்துக்கு, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனை, அவரது மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். மேலும், நாளை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதே விழாவில் ‘பாட்ஷா’ சிறப்பு படமாக திரையிடப்படவுள்ளது. அத்துடன், ‘படையப்பா’ படம் நாளை ரீரிலீஸ் ஆகிறது. இதற்கான புரோமோஷனில் ரஜினியே களமிறங்கிய நிலையில், ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ளது.
News December 12, 2025
புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை பாயுமா?

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பின்போது, புஸ்ஸி ஆனந்த் டோக்கன் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க கோரினார். இது மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், போலீஸ் விதிகளை மீறி புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டிருந்தால், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தவெக வைத்த கோரிக்கைபடியே நிபந்தனைகளை விதித்தோம் என்றும் கூறினார்.
News December 12, 2025
கோர விபத்தில் 22 பேர் பலி.. PM மோடி இரங்கல்

அருணாசல பிரதேசத்தில் இந்திய – சீன எல்லையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் டிரக் கவிழ்ந்த <<18533109>>விபத்தில்<<>> 22 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் & காயமடைந்தோருக்கு ₹50 ஆயிரமும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.


