News March 13, 2025
BJP கூட்டணியில் இருந்து இதை செய்தோம்.. இபிஎஸ் புது ரூட்டு!

2026 தேர்தலில் ADMK-BJP கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் EPS செயல்பாடுகள் இருப்பதாக, பலரும் கருத்து கூறி வருகின்றனர். அதற்கு காரணம் EPS-இன் X பதிவுதான். அதில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் 7.5% இட ஒதுக்கீடு, காவிரி மேலாண்மை ஆணையம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகிய நல்ல திட்டங்களைச் செய்ததாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
Similar News
News July 10, 2025
தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
News July 10, 2025
இரவு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாமக்கல், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடுமாம். அதேபோல் சேலம் மற்றும் தருமபுரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?
News July 10, 2025
மகளிர் உரிமைத் தொகை… மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் ஜூலை 15-ல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இத்திட்ட விரிவாக்கத்துக்கு அரசு ₹7 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளதாகவும், புதிதாக 5,833 பேருக்கு மட்டுமே ₹1,000 கொடுக்க முடியும் என்றும் <<17013157>>அன்புமணி<<>> குண்டை தூக்கி போட்டுள்ளார். புதிய பயனர்களுக்கு பணம் கிடைக்க தாமதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.