News April 8, 2024
எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது

யார் என்ன மொழி பேச வேண்டும் என ஆட்சியாளர்கள் முடிவு செய்ய முடியாது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். இந்தியை படிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். எனக்கு இந்தி தெரியும், ஆனால், கட்டாயப்படுத்தி பேசுங்கள் என்பதை ஏற்க மாட்டேன் எனக் கூறினார். மொழி, உணவு, உடை, கல்வியை அடுத்தவர்கள் மீது திணிப்பது நல்ல ஜனநாயகம் இல்லை. அதை நம்மை ஆளுகிற செய்தாலும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News March 19, 2026
விடுமுறை .. சற்றுமுன் புதிய அறிவிப்பு வெளியானது

தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் அரசு & தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறையை ECI வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை விடுமுறை அளிக்கவில்லையென்றால் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.
News March 19, 2026
சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்: நாதக வாக்குறுதி

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும். *தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி. *மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை. *நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் உள்ளிட்ட <<19423818>>பல வாக்குறுதிகள்<<>> இடம் பெற்றுள்ளன.
News March 19, 2026
சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணியா?

சசிகலாவுடன் இணைந்து ராமதாஸ் தரப்பு தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டார். திமுக கூட்டணியில் இணையவும் ஆதரவாளர்கள் விரும்பாததால், தவெகவுடன் கூட்டணி வைக்க பலர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுடன் இணைந்து வட மாவட்டங்களில் 40 இடங்களில் நிற்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளாராம்.


