News March 17, 2025
திமுகவின் ஊழல் குறித்து படமே எடுக்கலாம்: தமிழிசை

திமுகவின் ஊழல் குறித்து ஒரு திரைப்படமே எடுக்கலாம் என தமிழிசை விமர்சித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தொடர்பான ED அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் வெளியிட்ட அறிக்கையை ஆமோதித்த அவர், இந்த விவகாரத்தில் விஜய் கூறியது சரிதான் என்றார். முன்னதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக் மோசடி குறித்து ED பயன்படுத்திய வார்த்தையை பார்த்தால், திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்” எனக் கூறியிருந்தார்.
Similar News
News March 17, 2025
குடிநீரால் நின்ற திருமணம்.. கண்ணீரில் மணமக்கள்!

இதுக்கெல்லாமா கல்யாணம் நிற்கும் எனச் சிந்திக்க வைக்கிறது இந்த சாம்ராஜ்நகர் சம்பவம். கர்நாடகாவின் ஹிரியூரில் மனோஜ் – அனிதா ஜோடிக்கு நேற்று திருமணம் செய்ய கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு விழாவுக்கு தாமதமாக வந்த சிலருக்கு தண்ணீர் பாட்டில் வைக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட மோதலால் கல்யாணமே நின்றுபோய் கடைசியில் கண்ணீருடன் இளம்ஜோடி மண்டபத்தை காலி செய்த அவலம் நடந்துள்ளது.
News March 17, 2025
பாஜகவின் வினோஜ் பி.செல்வம் கைது

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகக்கோரி, அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொள்ள ரெடியாக இருந்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை கைதுசெய்து தனியார் மண்டபத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அதேபோல், பல மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
News March 17, 2025
தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது

விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது, மறைந்த மருத்துவர் செரியன், முன்னாள் உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.