News April 23, 2025

சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம்: டெஸ்லா

image

இந்திய சந்தையில் நுழைவதற்கான சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக டெஸ்லா CFO வைபவ் தனேஜா தெரிவித்துள்ளார். இந்தியா 100% இறக்குமதி வரி விதிப்பதால், இங்கு கார்களின் விலை 100 மடங்கு அதிகம் எனவும், இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா- USA வர்த்தக ஒப்பந்த தீர்வு, எலான் மஸ்கின் இந்திய வருகைக்கு பின், டெஸ்லா இந்திய சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 23, 2025

ஜாமின் கொடுத்ததே தவறு: ஒப்புக்கொண்ட நீதிபதிகள்

image

உங்களுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம்; அதனை நாங்கள் இப்போது ஒப்புக் கொள்கிறோம் என்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் பதவியில் தொடர்வதா (அ) ஜாமினா என்று முடிவெடுக்க, அவருக்கு 4 நாள்கள் கெடு விதித்துள்ளனர். ஜாமின் இல்லையெனில், சிறை செல்ல நேரிடும். என்ன முடிவெடுப்பார் செந்தில் பாலாஜி?

News April 23, 2025

சுக்கிரன் பெயர்ச்சி: கோடியில் புரளப் போகும் 5 ராசிகள்

image

சுக்கிரன் ஏப்.13-ல் மீன ராசியில் நிவர்த்தி அடைந்ததால், 2 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் அதிக நன்மை பெறும் ராசிகள்: *ரிஷபம்- பொருளாதார நிலை உயரும், தடைகள் நீங்கும் *கடகம்: தொழில், வேலையில் முன்னேற்றம், குடும்ப சூழல் மேம்படும் *துலாம்: பாசிடிவ் மாற்றங்கள். குடும்ப உறவு சிறக்கும். பயண வாய்ப்பு *விருச்சிகம்: வருமானம் உயரும், குடும்பத்தில் மகிழ்ச்சி *தனுசு: அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுதாக கிடைக்கும்.

News April 23, 2025

பாக்.-ஐ செதில் செதிலாக தகர்க்கும் இந்தியா?

image

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. *பாக். ராணுவம், லஷ்கர் – இ – தொய்பா முகாம்களில் தாக்குதல். *வர்த்தகத்தை முழுமையாக ரத்து செய்வது. *சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. *ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள P5 நாடுகளிடம் பாகிஸ்தான் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது.

error: Content is protected !!