News March 18, 2024

வேட்பு மனுவை முதல் ஆளாக பெற்றுச் சென்ற நாம் தமிழர் 

image

பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 20-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா இன்று முதன் முதலாக வேட்பு மனுவை அதிகாரிகளிடம் வாங்கி சென்றார்.

Similar News

News August 13, 2025

BREAKING: நெல்லை ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு

image

நெல்லை மனோன்மணியம் பல்கலைகழகத்தில் இன்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதாக மாணவி குற்றச்சாட்டு. ஆளுநர் பட்டம் பெற மறுத்து அந்த மாணவி துணைவேந்தரிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News August 13, 2025

பாபநாசம் அணை நீர்வரத்து கடும் சரிவு

image

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து இறங்குமுகமாக உள்ளது. இன்று ஆக. 13 காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 295 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1750 கன அடி நீர் வெளியேற்றபட்டது. அணை நீர் இருப்பு 117 அடியாக குறைந்தது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 107 அடி மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 95 அடி.

News August 13, 2025

நெல்லை: உங்க ஊரு தாசில்தார் நம்பர் இருக்கா..!

image

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்..
▶️திசையன்விளை- 9384094224
▶️சேரன்மகாதேவி- 9384094223
▶️மானூா்- 9384094222
▶️இராதாபுரம்- 9445000674
▶️நாங்குநேரி- 9445000673
▶️அம்பாசமுத்திரம்- 9445000672
▶️பாளையங்கோட்டை- 9445000669
▶️திருநெல்வேலி- 9445000671
*இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!