News April 17, 2025
நாங்கள் ஹிந்தியர்கள் கிடையாது: ராஜ் தாக்கரே

மஹாராஷ்டிர பள்ளிகளில் 3ஆவது மொழியாக ஹிந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் அறிவிப்பை நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். தாங்கள் இந்துக்களே தவிர ஹிந்தியர்கள் இல்லை எனவும், ஹிந்தி தேசிய மொழி இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேர்தல் வெற்றிக்காக மராத்தியர்கள்- மராத்தி அல்லாதவர்களுக்கு இடையே அரசு மோதலை உருவாக்குவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News April 19, 2025
என் உயிராடுற.. என்னடி மாயாவி நீ…

பிகில் புகழ் அம்ரிதா ஐயரின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு படுவைரலாகி வருகிறது. ஓவர் மேக்-அப் இன்றி, அழகிய ஆரஞ்ச் நிற சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த, நெட்டிசன்கள் நேற்று முதல் தங்களது தூக்கத்தை தொலைத்து விட்டனர். ‘றெக்க மட்டும் இருந்த அம்ரிதா தேவதைடா’ எனவும் வர்ணித்து வருகின்றனர்.
News April 19, 2025
அசாமில் மீண்டும் நில அதிர்வு

வடகிழக்கு மாநிலமான அசாமில் இன்று காலை 7.38 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 25 விநாடிகள் வரை நீடித்தது. ரிக்டர் அளவில் 2.9 வரை நில அதிர்வு பதிவானதால் கட்டடங்கள் மிக லேசாக குலுங்கின. இதற்கு முன் கடந்த பிப்.27 தேதி 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
News April 19, 2025
CSIR நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிஎஸ்ஐஆர்(CSIR) நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கல்லூரிகள், யுனிவர்சிட்டிகளில் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு போல 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக CSIR தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த பிப்.28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் 326 மையங்களில் நடந்த இத்தேர்வை 1.75 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது <