News September 25, 2025
நாம் தனியாக இல்லை.. ஏலியன்ஸ் இருக்கலாம்

பிரபஞ்சத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் இருப்பதால், வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு தற்போதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இருப்பினும் சில விவரிக்க முடியாத நிகழ்வுகளால், சந்தேகம் எழுந்துள்ளது. எதன்மூலம் இந்த சந்தேகம் என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஏலியன்ஸ் இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க
Similar News
News September 25, 2025
தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்: ரேவந்த் ரெட்டி

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், TN-ல் உள்ள காலை உணவுத் திட்டத்தை வரும் கல்வியாண்டில் தெலங்கானாவிலும் செயல்படுத்த உள்ளதாக கூறினார். மேலும், காமராஜர் ஆட்சியில் போடப்பட்ட அடித்தளம் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறினார்.
News September 25, 2025
படியுங்கள்; வேலையை உருவாக்க நான் உள்ளேன்: CM

ஒருவரது படிப்பால் அவரது குடும்பம் முன்னேறும், இதனால் மாநிலமும், நாடும் முன்னேறும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தான், மத்திய அரசு நிதி தர மறுப்பதாக விமர்சித்தார். மேலும், நன்றாக படியுங்கள் என அறிவுறுத்திய ஸ்டாலின், படிப்புக்கேற்ற வேலையை உருவாக்க நான் இருக்கிறேன் என்றும் உறுதியளித்தார்.
News September 25, 2025
மாதம் ₹1,000 உதவித்தொகை.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2025-26 கல்வியாண்டிற்கான ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களை CM ஸ்டாலின், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். சென்னையில் நடைபெற்று வரும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், அரசுப் பள்ளியில் படித்து சாதித்த பல மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இத்திட்டங்களில் இந்தாண்டில் கூடுதலாக 2.65 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.