News March 22, 2025
யாரை கண்டும் எங்களுக்கு பயமில்லை: செல்லூர் ராஜூ

அதிமுக யாருக்கும் எப்போதும் பயப்பட்டதில்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்ற அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு தாங்களே எஜமானர்கள், வேறு யாரும் இல்லை என்றார். அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கும், இபிஎஸ்ஸை முதல்வர் ஆக்குவதற்கும் யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 23, 2025
CSK ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்?

ரசிகர்கள் நாடி நரம்பெல்லாம் வெறி பிடித்து போய் CSK vs MI மேட்ச் பார்க்க காத்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்களின் ஆசையில் மண் அள்ளிப்போட மழை காத்திருக்கிறது. ஆம், இன்றைய தினம் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு மழை குறுக்கிட்டு கொஞ்சம் ஓவர்கள் குறைந்தாலும் ரசிகர்களுக்கு அது ஏமாற்றம் தானே. என்ன நடக்கப் போகுதோ!
News March 23, 2025
‘இன்னொன்னுதான்னே இது’ காமெடி கிங்கிற்கு இன்று பர்த்டே

ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து தமிழகத்தை கலக்கிய நடிகர் செந்திலுக்கு இன்று 74வது பர்த்டே. அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு, கவுண்டமணியை வறுத்தெடுப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவதை போல. அடி வாங்கியே மக்களின் அடி மனசு வரை சென்று இடம் பிடித்து விட்டார். அவரின் பர்த்டேவில் ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க, Less டென்ஷன், more work! more work, less டென்ஷன்! உங்களுக்கு பிடிச்ச அவரின் காமெடியை சொல்லுங்க!
News March 23, 2025
ஈரக்கையுடன் போன் சார்ஜ் போடுறீங்களா? உஷார் மக்களே!

மக்களே, கரண்ட் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் 9வது படிக்கும் மாணவி அனிதா, ஈரக்கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது அவரை ஹைவோல்டேஜ் மின்சாரம் தாக்கியுள்ளது ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற போது, மாணவி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய கவனக்குறைவு ஒரு உயிரை பறித்து விட்டது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் அதீத கவனத்துடன் இருங்க மக்களே!