News April 25, 2025
RCB போல் நாங்களும்… CSK கோச் ஃப்ளெம்மிங் கருத்து!

CSK அணி இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 2 மட்டுமே வெற்றி பெற்று பரிதாப நிலையில் உள்ளது. ஆனால், அடுத்த வரும் 6 போட்டிகளிலும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம் என CSK பயிற்சியாளர் ஃபெளம்மிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலையில் இருந்து, கடந்த ஆண்டு RCB தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சென்றதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். CSK பிளே ஆஃப் செல்லுமா? உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 25, 2025
வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடாதீர்கள்

வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில பழங்களால் வயிற்று தொடர்பான நோய்கள் வரக்கூடும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது உடலின் செரிமான அமைப்பை சேதப்படுத்தலாம். அதேபோல, வாழைப்பழம் சாப்பிட்டால், ரத்தத்தின் சமநிலை பாதிக்கப்படும். கொய்யா, மாதுளை போன்ற பழங்களை ஜீரணிப்பது கடினம் என்பதால், வயிற்று வலி வரலாம்.
News April 25, 2025
பஹல்காம் தாக்குதலுக்கு முக்கிய காரணம் இவர்தானா?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பாவின் பங்கு இருப்பதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் கண்டறிந்ததாக தகவல் வெளிவந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்தபடி அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், துணை தலைவர் சைபுல்லாஹ் ஆகியோர் இத்தாக்குதலை வழிநடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இத்தாக்குதலுக்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன், உள்ளூர் கிளர்ச்சியாளர்களும் இணைந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
News April 25, 2025
26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.