News April 7, 2025
அதிமுகவில் அண்ணன், தம்பி போல் இருக்கிறோம்

அதிமுகவில் எந்த விரிசலும் இல்லை; அண்ணன், தம்பி போல உள்ளோம் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததால், செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார் எனவும் EX மினிஸ்டர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நிர்மலா உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் கூடத்தான் நட்டாவை சந்தித்தேன்; தொகுதி பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர்களை MLAக்கள் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் நாசூக்காக பதிலளித்தார்.
Similar News
News April 7, 2025
நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்

பாஜக மாநிலத் தலைவருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லிக்கு பயணப்பட்டுள்ளார். நாளை காலை அவர் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், புதிய தலைவரை தேடும் பணியில் டெல்லி பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 7, 2025
மோடியை காணவில்லை: ராகுல்

டிரம்ப் வரிவிதிப்பால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் இன்று ₹19 லட்சம் கோடியை இழந்துள்ள நிலையில், மோடியை எங்கும் காணவில்லை என ராகுல் விமர்சித்துள்ளார். இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிக்கப்படும் என்ற யதார்த்தத்தை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவதைத் தவிர நமக்கு வேற வழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் பதில்

TN முழுவதும் இன்னும் சில நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், காலநிலை மேலாண்மை குழு பரிந்துரை அடிப்படையில், பள்ளி திறப்பு குறித்தும், விடுமுறை நீட்டிப்பு குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.