News March 29, 2025
அதிமுகவுடன் கூட்டணி பேசி வருகிறோம்: அமித்ஷா தடாலடி

ADMK – BJP கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருவதை அமித்ஷா உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும், DMK அரசின் நடவடிக்கையால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என EPS கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News January 26, 2026
கவர்னரின் தேநீர் விருந்துக்கு NO சொன்ன TN அரசு

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் RN ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழக அரசு சார்பில் CM, அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கவர்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் இருதரப்புக்கு இடையே பிரச்னை வெடித்தது. இதனிடையே CM ஸ்டாலின் மற்றும் DCM உதயநிதி தஞ்சையில் நடக்கும் திமுகவின் மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
News January 26, 2026
கரூர் விவகாரம்: விஜய்க்கு எச்சரிக்கை

விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லாததால்தான் அவருடன் யாரும் சேரவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அரசியலில் விஜய் 0 மாதிரி என்ற அவர், தனியாக இருந்தால் ஜீரோவுக்கு மதிப்பில்லை, ஆனால் யாருடனாவது சேர்ந்தால் அதற்கு மதிப்பு உண்டு எனவும் கூறியுள்ளார். மேலும் NDA ஆட்சியில் பிரச்னையின்றி விஜய் அரசியல் செய்ய முடியும், ஆனால் DMK ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை அவர் நினைவில் கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளார்.
News January 26, 2026
₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் அசத்தல் திட்டம்

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமாக இருக்கிறதா? மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மூலம் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்க்கலாம். இத்திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சைக்காக ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை கிடைக்கிறது. விண்ணப்பிக்க <


