News March 20, 2025
நாங்கள் அடிமைகள் அல்ல ராஜதந்திரிகள்: கே.பி.முனுசாமி

தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் ஸ்டாலின் கையில் இல்லை, பல பேரின் கையில் உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். திமுகவினர் தங்களை பாஜகவின் அடிமைகள் என கூறுவதாகவும், ஆனால் தாங்கள் அடிமைகள் இல்லை, ராஜதந்திரிகள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு மாநில முதல்வரால், மத்திய அரசிடம் இருந்து நிதியைக் கூட வாங்கித் தர முடியவில்லை எனவும் ஸ்டாலினை சாடியுள்ளார்.
Similar News
News March 20, 2025
‘எம்புரான்’ அற்புதமான படைப்பு: ரஜினி வாழ்த்து

எம்புரான் திரைப்படம் அற்புதமான படைப்பு என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். என் அருமை மோகன்லால் மற்றும் பிருத்விராஜின் எம்புரான் திரைப்பட டிரெய்லரை பார்த்தேன். அற்புதமான படைப்பு. வாழ்த்துகள் என X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ், நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 20, 2025
கெத்தான 10 கேப்டன்கள்.. வந்துருச்சு புது கோப்பை

IPL திருவிழா வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. அண்ணன் தம்பியாக இருந்த ரசிகர்கள் கூட அடுத்த 2 மாதங்களுக்கு எதிரும் புதிருமாக தான் இருப்பார்கள். இதனிடையே மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 அணி கேப்டன்களும் பங்கேற்றனர். அனைத்து கேப்டன்களும் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருஷம் கப்ப தூக்கப் போறது யாரு?
News March 20, 2025
கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்!

காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குழந்தைகள் பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு சத்தான உணவுகள் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு குறைந்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.