News April 14, 2024
உங்களை விட நாங்கள் பெரிய இந்துக்கள்

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை தொடுக்கும் முன் தரவுகளை படிக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் வலியுறுத்தியுள்ளார். பாஜக அளிக்கும் துண்டுச்சீட்டை சத்தமாக படிப்பதில் எந்த பயனும் இல்லை. மற்றவர்களை இந்து விரோதிகளாக சித்தரிப்பது பாஜகவின் வெற்றிக்கு உதவாது. ஏனெனில், அவர்களை விட நாங்கள் பெரிய இந்துக்கள் என தெரிவித்தார்.
Similar News
News December 1, 2025
சேலம் ரயில் எண்கள் மாற்றம்!

சேலம் ரயில்வே: 12677 என்ற எண் கொண்ட கே.எஸ்.ஆர்.பெங்களூரூ- எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இனி 16377 எண்ணாக ஆகவும், 12678 என்ற எண் கொண்ட எர்ணாகுளம்- கே.எஸ்.ஆர்.பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இனி 16378 எண்ணாக ஆகவும் மாற்றம் செய்யப்படுகிறது. புதிய ரயில் எண்கள் அடிப்படையில் வரும் டிச.03 முதல் மேற்கண்ட ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News December 1, 2025
புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோ? வெளியான புது அப்டேட்

புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தொடர்ந்து 3-வது நாளாக DGP அலுவலகத்தை புஸ்ஸி ஆனந்த் நாடியுள்ளார். நேற்று அலுவலகத்தை விட்டு வெளியே சென்றபோது எதுவும் பேசாமல் சென்ற அவர், தற்போது, நாளை மீண்டும் ஆலோசனைக்கு பிறகு முடிவு தெரியும் என அப்டேட் கொடுத்துள்ளார். வரும் 5-ம் தேதி புதுச்சேரியின் காலாப்பட்டு முதல் கன்னிக்கோவில் வரை விஜய்யின் ரோடு ஷோவை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.
News December 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை குறித்த மகிழ்ச்சியான அப்டேட் வெளியாகியுள்ளது. புதிதாக இணைந்தவர்களின் விவரம் இந்த வாரம் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிச.15 முதல் அவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் வ<<18422492>>ங்கிக் கணக்கு விவரங்களை<<>> அரசு அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் செல்லக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.


