News April 30, 2024

நாம் நிதியுதவி கேட்டுப் பிச்சையெடுத்து வருகிறோம்

image

பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு யார் பொறுப்பேற்பது? என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மவுலானா பசுலுர் ரகுமான் வினவியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர், ‘1947ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரே நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. இன்று இந்தியா ‘சூப்பர் பவர்’ நாடாகக் கனவு காண்கிறது. ஆனால் நாம் நாடு திவாலாவதைத் தவிர்க்க நிதியுதவி கேட்டு வருகிறோம்’ எனச் சோகத்துடன் பேசியுள்ளார்.

Similar News

News March 17, 2026

BREAKING: விஜய் அறிவிக்கிறார்

image

மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், ஓரிரு நாள்களில் வேட்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு குறைவான நாள்களே உள்ளதால், வேட்பாளர்கள் பட்டியலுடன் தேர்தல் அறிக்கையையும் சேர்த்து வெளியிட உள்ளாராம். ஏற்கெனவே, பெரம்பூர் தொகுதியில் விஜய், போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், அங்குத் தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணியை புஸ்ஸி ஆனந்த் தீவிரப்படுத்தியுள்ளார்.

News March 17, 2026

சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி?

image

தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் கனிமொழி, மாநில அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, திருவாரூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கனிமொழி போட்டியிட வேண்டும் என விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

News March 17, 2026

மம்தாவுக்கு எதிராக போட்டியிடும் அவரது EX தளபதி!

image

2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே.வங்கத்திற்கு 144 பேரை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், CM மம்தா பானர்ஜியின் பபானிபூர் தொகுதியில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும், மம்தாவின் EX தேர்தல் படை தளபதியுமாக இருந்த சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளார். இவர், 2021 தேர்தலில் மம்தா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!