News October 7, 2025
அனைவரும் நலமாக உள்ளோம்: விஜய் தேவரகொண்டா

நடிகர் <<17931989>>விஜய் தேவரகொண்டா<<>> சென்ற கார் விபத்திற்கு உள்ளான நிலையில், அனைவரும் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ந்தது சின்ன விபத்துதான் எனவும், தலையில் சிறிது வலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பிரியாணியும், நல்ல தூக்கமும் அந்த வலியை போக்கிவிடும் எனவும், அனைவரும் நல்லபடியாக வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 7, 2025
CJI மீது செருப்பு வீச முயன்றவர் விடுவிப்பு

CJI பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் யாரும் புகார் அளிக்காத நிலையில், அவர்களின் சம்மதத்தை பெற்று ராகேஷை விடுவித்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக வழக்கறிஞர் ராகேஷிடம் டெல்லி போலீசார் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.
News October 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 7, புரட்டாசி 21 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News October 7, 2025
TRB தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவையுங்கள்: அன்புமணி

அக்.12-ம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என TN அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் அத்தேர்வை எதிர்கொள்வதற்கு, கூடுதல் அவகாசம் தேவை என தேர்வர்கள் கோரிக்கை விடுப்பது நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கணினி முறையில் (CBT) தேர்வை நடத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.