News September 30, 2025
WC: இந்திய அணி ஏமாற்றம்

பெண்கள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 37 ஓவர்களில் 191/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில், நிதானமாகவே ஆடி வருகின்றனர். பிரதிகா ராவல் -37, ஹார்லின் டியோல் -48 ரன்கள் எடுத்தனர். ஸ்மிரிதி 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தற்போது தீப்தி சர்மா (31), அமஞ்சோத் கவுர் (37) களத்தில் உள்ளனர்.
Similar News
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு… உடனே இதை செய்யுங்க

சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு பெரியளவில் உள்ள நிலையில், இந்த டிப்ஸை பயன்படுத்தினால் சிலிண்டரை பெரியளவில் மிச்சம் பண்ணலாம். ➤ பிரஷர் குக்கரில் சமைத்தால் எரிபொருள் 20% மிச்சமாகும் ➤சமையல் ஒரு கொதி நிலையை அடைந்த பின் மிதமான தீயில் சமைக்கலாம் ➤ஊற வைத்து சமைப்பது நல்லது ➤அகலமான பாத்திரத்தை பயன்படுத்தலாம் ➤குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சமைத்தால் நீர் ஆவியாகும் நேரம் குறையும். SHARE IT
News March 10, 2026
CINEMA 360: ஒரே வீச்சில் ‘சேயோன்’

*‘சேயோன்’ படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம் *ரஜினி எழுதி வரும் அவரின் சுயசரிதை புத்தகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகுமாம் *‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளார் என டாக் *‘உறியடி’ விஜயகுமார் நடிக்கும் ‘அறிவு’ படத்தில் பிக்பாஸ் சுபிக்ஷா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
News March 10, 2026
உக்ரைனிடம் உதவி கேட்ட அமெரிக்கா

கடந்தாண்டு ஏவுகணைகள் கேட்ட ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து உதாசீனப்படுத்தினார். ஆனால் தற்போது, ஈரானின் Shahed ட்ரோன்களை சமாளிக்க முடியாமல் உக்ரைனின் உதவியை நாடியுள்ளார். மில்லியன் கணக்கில் செலவழித்து ஓய்ந்துபோன அமெரிக்கா, தற்போது ட்ரோன்களை எதிர்கொள்ளும் அனுபவம் கொண்ட உக்ரைனிடம் சென்றுள்ளது. ஒரு வருடத்திற்கு முன் உதவி கேட்ட நாடு, இன்று உதவி வழங்கும் நிலையில் உள்ளது.


