News November 1, 2025
WC ஃபைனல்: இன்னும் தொடங்காத டிக்கெட் விற்பனை

மகளிர் ODI உலகக்கோப்பை ஃபைனல் நாளை நடைபெற உள்ள நிலையில், BookMyShow-ல் இன்னும் டிக்கெட் விற்பனை தொடங்காதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மோசமான திட்டமிடல் என BCCI-ஐ குறிப்பிட்டு ரசிகர்கள் சாடி வருகின்றனர். ஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மோத உள்ளன. முன்னதாக, கடந்த 2023 ஆண்கள் ODI உலகக்கோப்பையின் போதும், கடைசி நிமிடத்தில் தான் டிக்கெட் விற்பனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 1, 2025
சற்றுமுன்: செவ்வாய்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் செவ்வாய்கிழமை(நவ.4) கடைசி நாளாகும்.
News November 1, 2025
இந்தி, ஆங்கிலத்தை எதிர்க்கும் சித்தராமையா

இந்தியும், ஆங்கிலமும் குழந்தைகளின் திறமையை பலவீனப்படுத்துவதாக கர்நாடக CM சித்தராமையா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் குழந்தைகள் தாய்மொழியில் சிந்தித்து, செயலாற்றும் நிலையில், இந்தியாவில் அது தலைகீழாக நடப்பதாகவும், பல்வேறு வகைகளில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தாய்மொழியை பயிற்று மொழியாக கொண்டு வர சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 1, 2025
மகளின் நினைவாக இளையராஜா புதிய அறிவிப்பு

மறைந்த தனது மகள் பவதாரிணியின் நினைவாக ‘பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ என்ற பெண்களுக்கான ஆர்கெஸ்ட்ராவை இளையராஜா தொடங்கியுள்ளார். இசைத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் பெண்கள், இதில் பதிவு செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக, 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு ஆர்கெஸ்ட்ரா தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். கேன்சர் காரணமாக பவதாரிணி கடந்தாண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


