News April 30, 2024
வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

▶கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ▶சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். ▶மோர், தயிர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசலை போன்றவற்றை பருகலாம். ▶வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும். ▶தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ▶நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.
Similar News
News January 27, 2026
பனிப்புயலில் சிக்கிய விமானம்… 7 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மெய்னே மாகாணத்தில் கடும் பனிப்புயலுக்கு இடையே பறந்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது. ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News January 27, 2026
பாலிவுட் அதன் ஆன்மாவை இழந்துவிட்டது: பிரகாஷ் ராஜ்

இந்தி சினிமாக்கள் இப்போது மியூசியத்தில் உள்ள பிளாஸ்டிக் சிலைகள் போல் பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். மேலும், பாலிவுட் அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமில்லை என்றும், ஆனால் ஜெய் பீம், மாமன்னன் போன்ற தென்னிந்திய படங்கள் மண்வாசனையோடு இன்னும் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன எனவும் பேசியுள்ளார்.
News January 27, 2026
மனைவிக்காக ப்ரோமோஷன் செய்யும் டிரம்ப்

தனது மனைவியும், US-ன் முதல் பெண்மணியுமான மெலனியா குறித்த ஆவணப்படத்தை காண டிக்கெட் எடுங்கள் என்ற டிரம்ப்பின் ட்விட் சர்ச்சையாகியுள்ளது. பனிப்புயல் ஒருபக்கம், குடியேற்ற அதிகாரிகளால் நடந்த கொலை மறுபக்கம் என அமெரிக்காவே முடங்கியுள்ளது. இதற்கிடையே மெலனியா ஆவணப்படம் வெள்ளை மாளிகையில் சிறப்பு திரையிடப்பட்டது அந்நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் ஜன.30-ம் தேதி ரிலீசாகிறது.


