News August 3, 2024
வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 388ஆக உயர்வு

வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக்குழுவினர் 5ஆவது நாளாக பாதிக்கப்பட்ட இடங்களில், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டலாம் என கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 27, 2025
1 நிமிடம் இதை படியுங்கள்… இத செய்யவே செய்யாதீங்க!

இரவுநேரம் வந்துவிட்டாலே மொபைல் அல்லது டிவி பார்ப்பது நம் வழக்கமாகிவிட்டது. மொபைல், டிவி தொடர்ந்து பார்க்கும்போது, அவற்றில் இருந்து வெளியாகும் நீல ஒளி, உங்கள் மூளையை கிளர்ச்சியடைய செய்து, இன்னும் பகல்நேரம் தான் உள்ளது என்பதுபோல் காட்டுகிறது. இதனால், தூக்கத்துக்கு காரணமான மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பை தடுத்து, உறக்கத்தை கெடுத்து, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. முக்கிய தகவலை SHARE பண்ணலாமே.
News November 27, 2025
கார் vs கர்சீப்: ஸ்டாலின் – EPS கடும் மோதல்

நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக PM-ஐ சந்திக்கிறேன் என EPS கூறினால், அரசு சார்பில் தானே வியர்க்காத அளவு நல்ல கார் ஏற்பாடு செய்து தருகிறேன் என CM ஸ்டாலின் சாடியிருந்தார். இந்நிலையில், ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையை துடைக்க கர்சீப்பை கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்ததையெல்லாம் மறந்துவிட்டீர்களா என EPS விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 27, 2025
Sports 360°: இன்று WPL வீராங்கனைகள் ஏலம்

*சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது. * WPL வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. *சையத் முஷ்டாக் அலி தொடரில், தமிழகத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. *Under-17 ஆசிய கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. *டி-20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் சிக்கந்தர் ராஸா முதலிடம் பிடித்துள்ளார்.


