News June 6, 2024
Way2News எதிரொலி: நீலகிரியில் அபராதம் விதிப்பு

சமீபகாலமாக கூடலூர் பந்தலூர் பகுதிகளில் அடிக்கடி கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் அனுமதி இன்றி சாலையோரங்களில் மனிதக் கழிவுகளை கொட்டி செல்கின்றது என்று Way2Newsஇல் செய்தி பதிவிட்டு இருந்தோம். இந்த நிலையில் நேற்று அனுமதியின்றி இயக்கிய கழிவுநீர் வாகனத்தை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தினர் பிடித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், உரிமையாளரிடம் பத்திரப்பதிவு தாளில் எழுத்து மூலம் உறுதிமொழியும் பெற்றனர்.
Similar News
News November 11, 2025
நீலகிரி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

நீலகிரி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 11, 2025
நீலகிரி: இனி EB OFFICE செல்ல வேண்டாம்

நீலகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்ற அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 11, 2025
நீலகிரி: தேனீக்கள் தாக்கி 6 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்டிச்சோலை அருகே வனத்துறையின் நர்சரியில் நேற்று காலை 11 மணியளவில் தேன் கூடு கலைந்து தேனீக்கள் தாக்கின. அதில் வாட்சர் தவமணி (55) கடுமையாக காயமடைந்தனர். அவரை காப்பாற்ற வந்த வாட்சர் நந்தினி மற்றும் தற்காலிக பணியாளர்கள் உஷா, சுசீலா, ரஞ்சினி, புவனேஸ்வரி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. ஆறு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


