News August 29, 2024
WAY2NEWS எதிரொலி சாலை மறியல் ரத்து

கட்டுக்குடிபட்டி கிராமத்திற்கு திருச்சியில் இருந்து வந்து சென்ற தனியார் பேருந்து தற்போது இயக்கப்படாததால் நாளை சாலை மறியல் போராட்டம் என மதியம் வேடூ செய்தியில் வெளியானது. உடனே இது குறித்து தனியார் பேருந்து மேனேஜர்(ம)பொதுமக்கள் உலகம்பட்டி காவல்நிலையத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் பஸ் கட்டுக்குடிப்பட்டி வரும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
Similar News
News August 16, 2025
சிவகங்கை: இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (16.08.25) இன்று இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
News August 16, 2025
சிவகங்கை: 1 இலட்சம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருட்கள் பயன்படுத்தும் உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 1 இலட்சமும், பதிவு சான்றிதழ் பெற்ற உணவு வணிகருக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆக.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575-243725.
News August 16, 2025
சிவகங்கை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <