News January 24, 2025
Way2Newsல் அரியலூர் நிருபராக விருப்பமா?

Way2News Appல் அரியலூர் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவும். நீங்கள் பள்ளி,கல்லூரியில் பணிபுரிபவரா? அரசு அலுவலரா? சமூக ஆர்வலரா? உங்கள் வேலை, பகுதி சார்ந்த நிகழ்வுகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டுங்கள். மேலும் விவரங்களுக்கு +9195429 22022 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News November 28, 2025
அரியலூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது அரியலூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
அரியலூர்: அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
அரியலூர்: பணியை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், அதனைக் கொண்டு வருவதை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


