News April 24, 2024

தர்பூசணி, இளநீர் விற்பனை, விலை அதிகரிப்பு

image

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் தர்பூசணி, எலுமிச்சை, இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம், இவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை, தற்போது 3 மடங்கு அதிகரித்து ₹120க்கு விற்பனையாகிறது. தர்பூசணி கிலோ ₹15-20 வரையும், இளநீர் ₹50-70 வரையும் விற்பனையாவதால் மக்கள் கோடை வெப்பத்தை தணிக்க அதிகம் செலவிட வேண்டியுள்ளது.

Similar News

News January 2, 2026

‘அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார் CM ஸ்டாலின்’

image

<<18692998>>நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள்<<>> சிலரை போலீசார் கொடூரமாக தாக்கியது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது கோரிக்கையை ஆதரித்த CM ஸ்டாலின், அதிகாரம் கிடைத்ததும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக விமர்சித்துள்ளார். அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை முடக்க முடியாது என்று கூறிய அவர், ஆசிரியர்களை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News January 2, 2026

வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசத்தை TN அரசு நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஜன.6 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <>www.dge.tn.gov.in<<>> தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் விண்ணப்பத்தை நிரப்பி HM வசம் ஒப்படைக்க வேண்டும்.

News January 2, 2026

தவெகவில் இணைந்தார் அதிமுக Ex MLA ஜேசிடி பிரபாகர்

image

தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். அண்மையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இப்போது, ஜேசிடி பிரபாகரும் தவெக பக்கம் திரும்பி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

error: Content is protected !!