News April 16, 2025
தர்பூசணியில் எந்த ரசாயனமும் இல்லை – தமிழக அரசு

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் உணவு பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
வரலாற்றில் இன்று!

➤உலக கல்லீரல் தினம்
➤1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
➤1975 – இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
➤1957 – முகேஷ் அம்பானி பிறந்தநாள்.
➤போலந்தில் பெரும் இன அழிப்பு நினைவு நாள்.
News April 19, 2025
இந்த செய்தி உண்மையில்லை: அதிமுக மறுப்பு

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றம் தலையீடு கூடாது; அப்படி தலையிட்டால் நீதி பரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு என இபிஎஸ் பேசியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிமுக இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது. சிறுபான்மையினருக்கும், நீதித் துறைக்கும் எதிரான கருத்தை இபிஎஸ் கூறியதாக திமுகவினரால் நியூஸ் பரப்பப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
News April 19, 2025
‘ரெட்ரோ’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘<