News September 16, 2025
PAK-கிற்கு செல்ல வேண்டிய நீர் இனி இந்தியாவிற்குள் பாயும்

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நீரை, நம் நாட்டில் பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு திருப்பிவிட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகள், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாக்.-க்கு செல்ல வேண்டிய சிந்து நதிநீரை மத்திய அரசு நிறுத்தியது.
Similar News
News September 16, 2025
2-வது திருமணம்: வருத்தத்தில் மீனா!

நடிகை மீனா 2-வது திருமணம் செய்யப்போகிறார், இந்த நடிகருடன் தான் திருமணம் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து, அண்மையில் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மீனா, இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவாகரத்தான நடிகர்களுடன் தனக்கு திருமணம் என வெளிவந்த செய்திகள் மனதளவில் மிகவும் வருத்தமடைய செய்ததாக கூறினார். மீனாவின் கணவர் வித்யாசாகர் 2022-ல் காலமானார்.
News September 16, 2025
விஜய் கட்சிக்கு விரைவில் END: வைகைச் செல்வன்

தவெகவை சனிக்கிழமை கட்சி என்று அதிமுகவின் வைகைச் செல்வன் விமர்சித்துள்ளார். எப்படி ஐடி ஊழியர்கள் வீக் எண்டில் எங்காவது ஜாலியாக சென்று வருவார்களோ, அதுமாதிரியான Weekend கட்சி தான் விஜய்யின் கட்சி என்று அவர் கூறியுள்ளார். அக்கட்சி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே செயல்படும் கட்சி என்றும், அது விரைவிலேயே END கட்சி ஆகிவிடும் எனவும் அவர் கிண்டலாக பேசியுள்ளார்.
News September 16, 2025
அடமானம் இல்லாமல் ₹20 லட்சம் வரை கடன் தரும் திட்டம்

ஏழை எளியோரும் தொழில் தொடங்கி, தொழில்முனைவோராக மாற ₹20 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் வழங்குகிறது முத்ரா கடன் திட்டம். இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று இந்த திட்டத்தின் பலனை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள https://www.mudra.org.in/ -ஐ தளத்தை பார்வையிடுங்கள். SHARE.