News July 27, 2024
அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிவு

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் காரையாறு அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 578.46 கன அடியாக குறைந்துள்ளது, மேலும், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி ஆகவும், 52 அடி முழு கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணைக்கு வினாடிக்கு 8 கன அடியாக நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.13] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News November 13, 2025
நெல்லை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

திருநெல்வேலி மகாராஜா நகர் பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை சுற்றி இரவு நேரத்தில் மர்ம நபர் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விட்டதான தகவலும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி எந்த வெடிகுண்டு மிரட்டலும் இல்லை என விளக்கம்.
News November 13, 2025
நெல்லை: முக்கிய ரயில்கள் 9 நாட்களுக்கு ரத்து

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பாரம் அமைக்கும் பணி காரணமாக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் மற்றும் நெல்லையிலிருந்து மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்படும் ரயில்கள் இன்று 13-ம் தேதி மற்றும் 14 15 17 19 20 21 22 24 ஆகிய தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE


