News August 7, 2024
போராடியபோது நாட்டின் மகள் இல்லையா?: பஜ்ரங் புனியா

டெல்லியில் போராடியபோது ஒரு வார்த்தை கூட பேசாத மத்திய அரசு, வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸில் சாதித்ததும், நாட்டின் மகள் ஆகிவிட்டாரா என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கேள்வி எழுப்பியுள்ளார். தான் உட்பட போராடியவர்களை சாதி ரீதியாக பிரித்து, ₹15-க்கு போராடியதாக விமர்சித்தார்கள் எனவும், வினேஷ் போகத்தின் வெற்றி, பாஜகவின் ஐடி பிரிவு மற்றும் பிரிஜ் பூஷணின் கன்னத்தில் விழுந்த அறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 16, 2026
மாவட்ட எல்லையில் வாகன சோதனை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நகரின் எல்லை பகுதியான மச்சுவாடியில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக பணம் கொண்டு செல்லப்படுகிறதா? வாக்காளர்களுக்கு வழங்க இலவச பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
News March 16, 2026
மீண்டும் சீண்டுகிறாரா மாணிக்கம் தாகூர்?

ஆணவ கொலைகளுக்கு எதிராக ’இவா நம்மவா’ மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆணவ கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக இது ஒரு வலுவான பதில் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுவே உண்மையான சமூக நீதி என்றும், குறைவான பேச்சு, அதிகமான செயல் எனவும் கர்நாடக அரசை பாராட்டியுள்ளார். அதேவேளையில் TN-ல் ஆணவ கொலைகளைத் தடுக்க இப்படி ஒரு சட்டம் எப்போது வரும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 16, 2026
BREAKING: தேர்தல் பணம்.. CEO புதிய அறிவிப்பு

தேர்தலில் வாக்குக்காக பணம் கொடுப்பதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருவதாக CEO அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். மேலும், சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால், பொதுமக்களை தொந்தரவு செய்யாமல் உடனடியாக திருப்பி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். குறிப்பாக ஆன்லைனில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


