News October 26, 2025
CSK அணியில் வாஷிங்டன் சுந்தர்.. வெளியான தகவல்

CSK அணியில் வாஷிங்டன் சுந்தர் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் ₹3.2 கோடிக்கு வாஷிங்டன் சுந்தரை வாங்கிய நிலையில், அதே தொகைக்கு CSK அவரை டிரேடிங் செய்துள்ளதாக அஷ்வினின் யூடியூப் சேனலில் தகவல் கசிந்துள்ளது. அஷ்வின் IPL-ல் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால், மண்ணின் மைந்தனான ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை CSK அணி தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News January 15, 2026
TN-ஐயும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது: அமைச்சர்

பண்டைய தமிழகம் ஆன்மிக பூமியாக திகழ்ந்தது, ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், TN-ஐயும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது இரண்டும் பின்னிப்பிணைந்தவை என்றார். ஆனால், சமீபமாக சனாதனம் மீதான மாண்பு குறைந்து வருகிறது எனவும் அது குறித்து கேலியும் விமர்சனமும் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் தங்கம் விலை புதிய உச்சம்

பொங்கல் பண்டிகையான இன்று(ஜன.15) தங்கம் சவரனுக்கு ₹80 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹13,290-க்கும், சவரன் ₹1,06,320-க்கும் விற்பனையாகிறது.
News January 15, 2026
விவசாயிகள் சந்தோசமா இருக்கணும்.. ரஜினி வாழ்த்து!

தனது வீட்டு வாசலில் காலை முதல் காத்திருந்த ரசிகர்களை நோக்கி, புன்னகையுடன் கையசைத்த அவர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினார். மேலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் சந்தோசமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பனியையும் பொருட்படுத்தாமல் காலை முதலே காத்திருந்த ரசிகர்கள் அவரை பார்த்தும் ‘தலைவா.. தலைவா’ என கத்தி கூச்சலிட்டனர்.


