News January 22, 2025

குப்பைத் தொட்டியாய் மாறிய வாஷிங்டன்

image

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஒன் அரங்கில் நேற்று நடந்தது. இந்த அரங்க விதிகளின் படி, பார்வையாளர்கள் பை போன்ற தங்களது உடமைகளை உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. இதனால், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், வெளியே விட்டுச் சென்ற உடமைகள் தான் இவை. மலைபோல் குவிந்த பொருள்களை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்த நிலையில், கைவிடப்பட்டவைகளை மற்றவர்கள் எடுத்துச்சென்றனர்.

Similar News

News March 5, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

image

தங்கம் விலை இன்றும் (மார்ச் 5) மளமளவென குறைந்துள்ளது. இதன்படி, 1 கிராம் தங்கம் ₹80 குறைந்து ₹15,120-க்கும், 1 சவரன் ₹640 குறைந்து ₹1,20,960-க்கும் விற்பனையாகிறது. போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேளையில், இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்து வருகிறது.

News March 5, 2026

போர் பதற்றம்.. தொடரை தள்ளிவைத்த ICC!

image

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, நேபாளத்தின் கீர்திபூரில் நடைபெற இருந்த ODI WC லீக்-2 தொடரின் 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ODI உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்காக நடத்தப்படும் இந்த தொடரில் நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத இருந்தன. தொடர் நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ICC அறிவித்துள்ளது.

News March 5, 2026

விஜய்யுடன் யார் பேசுனா? செல்வப்பெருந்தகை

image

விஜய்யுடன் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதேநேரம், வேறு யாரேனும் தனிப்பட்டு பேசியிருந்தால், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக – காங்., தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கூடுதலாக 3 + 1 தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!