News August 23, 2024

தங்க மெடல்களை தட்டி தூக்கிய வீரமங்கைகள்

image

17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 4 வீராங்கனைகள் தங்க மெடல்களை வென்றுள்ளனர். 43kg எடைப்பிரிவில் அதிதி குமாரி, 57kg-யில் நேகா, 65kg-யில் புல்கிட், 73kg-யில் மான்ஸி லாதெர் ஆகியோர் உலக சாம்பியன் ஆகியுள்ளனர். மேலும் இன்று நடைபெற உள்ள தங்க பதக்கத்திற்கான போட்டியில் காஜல் (69kg) மற்றும் சிவாஜி பாட்டில் (46kg) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Similar News

News December 9, 2025

நாகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

வாய்மேடு துணைமின் நிலையத்தில் இன்று (டிச.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாகை மாவட்டம், அண்ணாபேட்டை, வண்டுவாஞ்சேரி, துளசியாபட்டினம், கரையங்காடு, விளாங்காடு, கற்பகநாதர்குளம், கீழபெருமழை, மேலபெருமழை, தில்லைவிளாகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

திமுக அரசை தூக்கி அடிப்போம்: ஹெச்.ராஜா

image

திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என ஹெச்.ராஜா சாடியுள்ளார். வரும் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் பிரச்னை தான் இருக்கும் என்ற அவர், இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம் என தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.

News December 9, 2025

செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைகிறார்

image

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்த அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராக செல்வத்தை அதிமுக களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!