News February 28, 2025
காவல் ஆய்வாளருக்கு வாரண்ட்.. சீமான் வழக்கில் திடீர் திருப்பம்

சீமான் வீட்டில் நேற்று சம்மன் அளிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வேறொரு வழக்கில் தாம்பரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2019இல் வழக்கறிஞர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சீமான் மீதான பாலியல் வழக்கில் அவர் இன்று ஆஜராக உள்ள நிலையில், இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 28, 2025
முந்துங்கள்.. ₹20 லட்சம் சன்மானம்…

கோலிவுட்டின் தலைநகரமாக சென்னை சாலிகிராமம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுபவமிக்க இயக்குநரின் தரமான படைப்பு ஒன்று தயாராக இருப்பதாகவும், அதற்கு ₹2 கோடி முதலீடு பெற்றுத் தருவோருக்கு ₹20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போஸ்டர் கூறுகிறது. ஆனால், இதனை யார் ஒட்டியது என்ற தகவல் இல்லை.
News February 28, 2025
50% நிதிப் பகிர்வு வேண்டும்: தங்கம் தென்னரசு

மாநிலங்களுக்கான நிதியை 40% ஆக குறைத்து நிதிக்குழு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு 50% நிதிப்பகிர்வு வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்துவதாக கூறிய அவர், 41%லிருந்து 40%ஆக பரிந்துரைக்கும் நிதிக்குழு முடிவை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இப்படியா நடத்துவது என்றும் அவர் சாடியுள்ளார்.
News February 28, 2025
மகளிர் உரிமைத் தொகை: யார்-யார் புதிதாக சேர்ப்பு?

மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி ரேஷன் அட்டை பெற்றவர்கள், முன்பு விண்ணப்பிக்க தவறியோர், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு சரியான ஆவணத்தை தாக்கல் செய்தோர், மின்சாரம் 3,600 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துவோர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.