News September 13, 2025
எச்சரிக்கை! ஹேர் டையால் கேன்சர் வரும் அபாயம்?

நரை முடியை மறைக்க ஹேர் டைகளை பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ஹேர் டைகளில் PPD (Para-Phenylene Diamine), அமோனியா, பாராபென் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இதனால் அலர்ஜி, தோல் நோய்கள் வருவது முதல் கார்சினோஜென் எனப்படும் கேன்சர் செல்களை கூட உருவாக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அமோனியா இல்லாத ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்தலாம். SHARE.
Similar News
News September 13, 2025
1 GB பிளானை நீக்கியது குறித்து விளக்கம் கேட்கும் TRAI

எண்ட்ரி லெவல் 1 GB பிளானை நீக்கியது குறித்து ஜியோ, ஏர்டெலிடம் TRAI விளக்கம் கேட்டுள்ளது. இந்த ₹249 பிளானை நீக்கியது கஸ்டமர்களுக்கு மேலதிக சுமைகளை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பிளான் ஆஃப்லைனில் கிடைப்பதாக ஜியோ தெரிவித்த நிலையில், கஸ்டமர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையிலேயே பிளான் நீக்கப்பட்டதாக ஏர்டெல் கூறியுள்ளது. தற்போதைய எண்ட்ரி லெவல் பிளான் ₹299 ஆகும்.
News September 13, 2025
திருச்சியில் முதல் பரப்புரை ஏன்… விஜய் விளக்கம்

போருக்கு முன்னர் குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்வதைபோல் 2026 தேர்தலுக்கான முதல் களமாக திருச்சியை தேர்வு செய்துள்ளதாக விஜய் கூறியுள்ளார். அரசியலில் பல்வேறு திருப்பங்களை திருச்சி நகரம் கொடுத்துள்ளதாக கூறிய அவர், அறிஞர் அண்ணா தேர்தலில் போட்டியிட விரும்பிய இடம், MGR மாநாடு நடத்திய இடம், பெரியார் வாழ்ந்த இடம் என எப்போதும், திருச்சிக்கு அரசியல் திருப்புமுனை வரலாறு இருப்பதாக கூறினார்.
News September 13, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் கனமழை வெளுத்து வாங்குமாம். மேலும், 18-ம் தேதி வரை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள்!