News August 3, 2024
SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

SBI வாடிக்கையாளர்களிடம் ரிவார்ட் பாயிண்ட் என்ற பெயரில் சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்து வருகின்றனர். அக்கவுண்ட்டில் ரிவார்டு பாயிண்டுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றைப் பெற SBI Rewards ஆஃபை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் பயனர்களுக்கு ஒரு APK ஃபைல் அனுப்பப்படுகிறது. ஆனால், இது பொய் செய்தி என்றும், அந்த ஆஃபை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் PIB Fact Check எச்சரித்துள்ளது.
Similar News
News November 24, 2025
ஆஷஸ் தொடரில் ஆஸி.,க்கு ₹17 கோடி நஷ்டம்?

பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி., வெற்றி பெற்றது. அதேநேரம், இப்போட்டி 2 நாள்களிலேயே முடிவுற்றதால், 3, 4-ம் நாள்களுக்கான டிக்கெட் விற்பனை இல்லாமல் போனது. இதனால் ஆஸி., கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ₹17.32 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போதும் ₹65 கோடி இழப்பை ஆஸி., சந்தித்துள்ளது.
News November 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 529 ▶குறள்: தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். ▶பொருள்: உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.
News November 24, 2025
சிந்து இந்தியாவுடன் இணையலாம்: ராஜ்நாத் சிங்

குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கை பெறுவதற்காக, அவர்களை திருப்திபடுத்தும் அரசு (காங்.,), சிந்துவில் இருந்து வந்த அந்நாட்டு (பாக்.,) சிறுபான்மையினரை (இந்துக்கள்) அவமானப்படுத்தியதாக ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இல்லாமல் இருக்கலாம் என்ற அவர், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்றும் கூறினார்.


