News August 4, 2024
நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை முதல் கனமழை மற்றும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மறுஅறிவிப்பு வெளியாகும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
நெல்லையில் தேசிய புத்தக கண்காட்சி

நெல்லை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்தும் 40வது தேசிய புத்தக கண்காட்சி நாளை (நவ.14) மாலை 5 மணிக்கு எஸ்.என் ஹை ரோடு நயினார் காம்ப்ளக்ஸ் அருகில் வைத்து நடைபெற உள்ளது. நிவேதிதா கல்விக் குழுமம் முத்துக்குமாரசாமி புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். புத்தகக் கண்காட்சி நவ.14 முதல் 30 வரை நடைபெறுகிறது.
News November 14, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.13] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News November 13, 2025
நெல்லை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

திருநெல்வேலி மகாராஜா நகர் பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை சுற்றி இரவு நேரத்தில் மர்ம நபர் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விட்டதான தகவலும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி எந்த வெடிகுண்டு மிரட்டலும் இல்லை என விளக்கம்.


