News July 26, 2024
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜா சாகர், சாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணராஜா சாகர் அணையிலிருந்து 80,000 கன அடி வரை நீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காவிரியில் கடந்த பத்து நாள்களாக பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
கிங் கோலியின் சாதனை.. வீறுநடை போடும் இந்தியா

ODI கிரிக்கெட்டில் சேஸ் மாஸ்டரான விராட் கோலி கடைசியாக அடித்த 17 சதங்களில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. 17 போட்டிகளில் இந்தியா 15-ல் வெற்றி, இரு போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன. மேலும், சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதிலும் நம்பர் 1 வீரராக கோலி உள்ளார். அவர் 82 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அதில் இந்தியா 59 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.
News December 2, 2025
ரசிகர்களை என்னை கொண்டாட வேண்டாம்: SK

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, தனது ரசிகர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார். ரசிகர்கள் தன்னை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்திய அவர், பெற்றோர்களை கொண்டாடினால் போதும் எனவும் கூறியுள்ளார். ரசிகர்கள் தன்னிடம் குடும்பமாக பழகவேண்டும் என்பதே ஆசை என்றும், அதனால்தான் அனைவரையும் சகோதர, சகோதரிகள் என அழைத்து வருவதாகவும் பேசியுள்ளார்.
News December 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 2, கார்த்திகை 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


