News August 20, 2024
தனியார் பள்ளிகளுக்கு WARNING

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதன் எதிரொலியாக, அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு எச்சரித்துள்ளது. பள்ளிகளில் எவ்வித முகாம் நடத்தினாலும், பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலர் முன்அனுமதி பெற வேண்டும். இதை மீறி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மூலம் பயிற்சிகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 11, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு என CM சொல்வது பொய்: நயினார்

தமிழகம் உள்பட எங்குமே சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் சொல்வது முழுக்க முழுக்க பொய் என்றார். ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டதற்கும், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை; கேஸ் தேவைப்பட்டால் ஒரு கேஸ் டீலர் என்ற முறையில் தானே அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News March 11, 2026
ஹாஸ்பிடல்களில் விறகு அடுப்பு: மா.சுப்பிரமணியன்

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஹாஸ்பிடல் கேண்டீன்களில் பாதிப்பில்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாட்டின் மாற்று ஏற்பாடாக, அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் Induction Stove & விறகு அடுப்புகளை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார். நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
News March 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


