News March 27, 2025

IPLஐ மிஞ்சிய வார்னரின் கேமியோ ரோல் சம்பளம்!

image

IPL தொடர் மூலம் இந்திய ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார் டேவிட் வார்னர். இந்த ஆண்டு எந்த அணியும் ஏலத்தில் வாங்காத நிலையில் அவர், தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். ராபின்ஹூட் என்ற படத்தில் கேமியோ காட்சியில் அவர் சுமார் 2.50 நிமிடங்கள் வருகிறாராம். அதற்கு அவர் ₹2.50 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. IPL-ஐ விட, இதில் நல்லா துட்டு பார்க்கலாம் என நினைத்துவிட்டார் போலும்!

Similar News

News September 16, 2025

BREAKING: அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு.. சிகிச்சை

image

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், 2026 தேர்தல், கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வளவு முக்கியமான கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என தகவல் பரவியது. இதனையடுத்து, அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

News September 16, 2025

MGR படத்தை பயன்படுத்த ADMK-க்கு மட்டுமே உரிமை: KTR

image

MGR போட்டோவை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்கிறது; புதிதாக வரும் கட்சிகள் MGR போட்டோவை பயன்படுத்தி, அவரது புகழை திருட பார்ப்பதாக விஜய் மீது ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல, காட்டாறு போல ஓடும் கூட்டம். அவருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை. அவர் 3-வது அணி அமைத்தாலும் வெற்றி கிடைக்காது எனவும் தெரிவித்தார்.

News September 16, 2025

நகைக்கடன்.. வங்கிக்கு படையெடுக்கும் தமிழக மக்கள்

image

2021 தேர்தலை போலவே, 2026 தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், இதுவரை நகை அடமானக் கடன் வாங்காதவர்களும் கூட 3 – 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் பெற, கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு இலக்கைவிட அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!