News April 14, 2024

உடனடியாக உதவிய தவெக நிர்வாகிகள்

image

சென்னை பெருங்குடியில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் குமார் என்பவரது வீடு மின் கசிவு காரணமாக தீக்கிரையானது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அவருக்கு ₹30,000 பணம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தவெக தொண்டர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

ஆசிட் வீச்சு முதல் பத்மஸ்ரீ விருது வரை!

image

ம.பி.,யை சேர்ந்த மங்களா கபூர், 12 வயதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுகிறார். அவருக்கு தொடர்ச்சியாக 37 அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்குள் இருந்த தன்னம்பிக்கை கொஞ்சமும் துவண்டு போகவில்லை. இசைத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர், குவாலியர் கரானா பாரம்பரிய இசையில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மத்திய அரசால் தற்போது ‘பத்ம ஸ்ரீ’ விருதை பெற்றுள்ளவர், அனைவருக்கும் ஒரு முன்மாதிரியே!

News January 26, 2026

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் 28-ம் தேதி(புதன்கிழமை) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 7-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என கலெக்டர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News January 26, 2026

ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்ற விஜய்: KN நேரு

image

எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டேன் எனக் கூறிய விஜய்யை அமைச்சர் நேரு மறைமுகமாக விமர்சித்துள்ளார். பட ரீலிசிற்காக Ex CM ஜெயலலிதாவிடம் விஜய்யும், அவரது தந்தையும் கைகட்டி நின்றதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று நேரு சாடியுள்ளார். மேலும், உங்களுக்கு நான் என்றைக்குமே எதிரியல்ல என ஜெயலலிதாவிடம் கூறி அழுத்தத்திற்கு பயந்த விஜய், தற்போது வீரவசனம் பேசுவதாகவும் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!