News March 18, 2025
போர்… டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், USA அதிபர் டிரம்ப் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, PM மோடி உள்பட பல நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், டிரம்ப்-புதின் ஆகியோரது இன்றைய சந்திப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. போர் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
Similar News
News March 18, 2025
அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் ரெய்டு

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) ரெய்டு நடத்தியுள்ளது. தரம் குறைந்த பொருள்கள் விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்டையில், நாடு முழுவதும் உள்ள கிடங்குகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக BIS அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எலக்ட்ரிக் பொருள்கள், வாட்டர் பாட்டில்கள் என 100க்கும் அதிகமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News March 18, 2025
உலகை உலுக்கும் புகைப்படங்கள்.. கண்ணீர்

காசாவில் இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் இதுவரை 300 பேர் இறந்துள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் சிறுவர்கள், பெண்கள் என அப்பாவி மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறும் சத்தம் நெஞ்சை ரணமாக்குகிறது. இதுதொடர்பான <
News March 18, 2025
செயற்கை இதயத்துடன் உயிர் வாழும் மனிதர்!

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக செயற்கை இதயத்துடன் 100 நாள் வாழ்ந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். நியூ சவூத்வேல்ஸை சேர்ந்த அந்த நபருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட, சிட்னியில் உள்ள ஹாஸ்பிடலில் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்ட BiVACOR என்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அதனுடன் 100 நாள் வரை அவர் கடந்திருக்கிறார். உலகிலேயே 6 பேருக்கு மட்டுமே இதுவரை செயற்கை இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது.