News April 25, 2025
பாகிஸ்தான் மீது போர் தேவையற்றது: திருமாவளவன்

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதனை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு எதிரான யுத்தம் தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். ஜாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடு அல்லாமல், இந்தியர் என்ற உணர்வோடு நாம் அனைவரும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Similar News
News September 12, 2025
நாளை மிக கவனம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வலுபெறக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்கள். குடையை மறக்க வேண்டாம்!
News September 12, 2025
ASIA CUP: ஓமனிடம் திணறிய பாக்., பேட்ஸ்மென்கள்

ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் குவிக்க, மற்ற வீரர்களோ ஓமன் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்களை இழந்து பாக்., 160 ரன்கள் எடுத்தது. ஓமன் தரப்பில் ஷா பைசல், அமிர் கலீம் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
News September 12, 2025
உலகின் முதல் AI அமைச்சர்!

உலகிலேயே முதல்முறையாக AI அமைச்சரை அல்பேனிய அரசு நியமித்துள்ளது. Diella (அல்பேனிய மொழியில் சூரியன்) என பெயர் கொண்ட இந்த பெண் AI அமைச்சர், தனியாருக்கு வழங்கப்படும் அரசின் டெண்டர் விவகாரங்களை மேற்பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையான நிர்வாக காரணங்களுக்காக Diella நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.