News August 11, 2025
‘யுத்த நாயகன்’ காலமானார்

ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் டிகே பருல்கார், நேற்று காலமானார். 1965 இந்திய – பாகிஸ்தான் போரின் போது, இவரது விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. விமானத்தை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்படுமாறு உயர் அதிகாரிகள் கூறினாலும், விமானத்துடன் நாட்டிற்கு வந்த தீரன் இவர். அதேபோல், 1971 பாகிஸ்தான் போரின் போது, போர் கைதியாக இவர் பிடிபட்டார். ஆனால், அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்தடைந்தார்.
Similar News
News August 11, 2025
புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய 2025 வருமான வரி மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. தற்போது வரி செலுத்துவோருக்கு பயன் தரும் வகையில், திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை இன்னும் சற்றுநேரத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். TDS, TCS-ஐ விரைவாகவும், எளிதாகவும் மாற்றும் வகையிலும், வீட்டுக் கடனுக்கான வட்டி டிடக்ஷனில் கூடுதல் பலன் போன்ற பல மாற்றங்களுடன் புதிய மசோதா தாக்கலாகிறது.
News August 11, 2025
ரோஹித்- கோலியின் Future? கங்குலி பதில்!

2027 ODI WC-ல் ரோஹித் & கோலியை விளையாட வைக்க BCCI விரும்பவில்லை என்றும், அவர்கள் இந்த ஆண்டே ODI-ல் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இருவரும் நன்றாக ரன்குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் எனக் கூறினார். மேலும், இருவரும் ODI-ல் நிறைய சாதித்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
News August 11, 2025
அதிமுக ஆட்சியில் திருப்பூர் புறக்கணிக்கப்பட்டது: CM

திருப்பூர் மாவட்டத்தில் ₹950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ADMK ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். DMK ஆட்சியில் ₹10,491 கோடியில் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்திக்கடவு-அவிநாசி திட்டமும் DMK ஆட்சியில்தான் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.