News January 31, 2025
போர் அடிச்சது: முர்முவை விமர்சித்த காங்..

பட்ஜெட் தொடர்பான குடியரசுத்தலைவர் முர்முவின் உரை போர் அடித்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லி, பொய் வாக்குறுதிகளை அளித்ததாக சோனியா காந்தியும் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, பழங்குடியின குடியரசுத்தலைவரை காங்கிரஸ் அவமதித்து விட்டதாகவும், இதை நாட்டு மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 14, 2026
லெனின் பொன்மொழிகள்

▶பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை. ▶நம்பிக்கை நல்லதுதான். ஆனால் கட்டுப்பாடு சிறந்தது. ▶நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே; நீ விரும்புவதை உலகம் எதிர்த்தாலும் செய்து முடி. ▶தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். ▶பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
News March 14, 2026
விஜய்யின் ஒப்புதல் இன்றி இது நடைபெறாது: துரை வைகோ

எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால்தான், மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் என விஜய்க்கு துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். திமுக, பாஜகவை எதிரி எதிர்த்துதான் அரசியலுக்கு வந்ததாக விஜய் கூறினார்; ஆனால் திடீரென தவெக மா.செ கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் கூட்டணி விரும்புவதாக கூறுவது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்பதையே காட்டுகிறது என்றும், விஜய்யின் முடிவு காலப்போக்கில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.
News March 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 632 ▶குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. ▶பொருள்: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.


