News April 5, 2025
வக்ஃப் விவகாரம்: தர்ம சங்கடத்தில் நிதிஷ்குமார்

வக்ஃப் திருத்த மசோதாவை ஆதரித்ததால், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் JDU கட்சியின் இளைஞர் அணி துணைத்தலைவர் டாப்ரெஷ் ஹசன், கட்சியில் இருந்து விலகியுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், இதுவரை 5 பேர் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேபோல் NDA கூட்டணி கட்சியான உ.பியின் ராஷ்டீரிய லோக் தளத்தில் இருந்தும் ஷாஜாய்ப் ரிஷ்வி என்ற நிர்வாகி விலகியுள்ளார்.
Similar News
News April 5, 2025
போலீசில் 1,299 பணியிடங்கள்.. சம்பளம் ₹1.16 லட்சம்

தமிழ்நாடு போலீஸில் 1,299 SI, 2ஆம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்து, 20- 30 வயதுடையோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹36,900 -₹1,16,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொது மற்றும் துறை ரீதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு தனித்தனியாக எழுத்து தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News April 5, 2025
7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 5, 2025
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை?

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் பழனி எம்எல்ஏ செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், அப்பணிகள் முடிந்ததும் மாற்றுப்பாதை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.