News April 2, 2025
நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா தாக்கல்: எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் தாக்கலான வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவின் அம்சங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து நடமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News April 3, 2025
இந்தியாவில் எந்தெந்த துறைகள் பாதிக்கும்?

டிரம்பின் அதிரடி வரி விதிப்பால் இந்திய ஜவுளிகள், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங் பொருட்கள் மற்றும் நகை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 26% வரி விதிப்பால், இந்த துறைகள் உடனடியாக பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. மருந்து பொருட்கள் ஏற்றுமதி பாதிக்குமா என்பது போக, போகத் தான் தெரியுமாம். இதனால், இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
News April 3, 2025
‘Ghibli’ செய்வோர் ஜாக்கிரதை.. சைபர் கிரைம் எச்சரிக்கை

சோஷியல் மீடியாக்களில் உங்களது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். டிரெண்டிங் மோகத்தில் நீங்கள் பதிவிடும் போட்டோ, பிறந்தநாள் தகவல்களை திருடி, அனுமதியின்றி உங்கள் தரவுகளை எடுக்க முடியும். இதனால், விழிப்போடு இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது டிரெண்டாகும் OpenAI ஜிபிலி செய்தவர்கள் அவர்களது போட்டோ, DOB பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
News April 3, 2025
எந்த நாட்டுக்கு அதிக வரி விதிப்பு?

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பில் எந்த நாட்டிற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? கம்போடியாவுக்கு. மிக அதிகமாக 49% வரி விதிக்கப்பட்டுள்ளது. லாவோஸ் 48%, மடகாஸ்கர் 47%, வியட்நாம் 46%, இலங்கை, மியான்மர் நாடுகளுக்கு முறையே தலா 44% வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியா, சிலி, கொலம்பியா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.