News April 4, 2025

வக்ஃப் மசோதா: நீதிமன்றத்தை நாடும் காங்கிரஸ்

image

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கு எதிரான மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 20, 2025

மூணாறில் எங்கே போகலாம்?

image

மூணாறு பலரது பேவரைட் ஸ்பாட்டாக உள்ளது. மூணாறு செல்பவர்களுக்கு அதனை சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. அவை எந்த இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க இந்த இடங்களுக்கு போனீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க. இல்லைனா அடுத்தமுறை போகும்போது மிஸ் பண்ணாதீங்க.

News September 20, 2025

இந்தியாவுக்கு பெரிய எதிரிகளே இல்லை: PM மோடி

image

உலகில் இந்தியாவுக்கென பெரிய எதிரிகள் யாரும் இல்லை என குஜராத்தில் PM மோடி கூறியுள்ளார். மற்ற நாடுகளை சார்ந்து இருப்பது தான் நமது நாட்டின் பலவீனம் என தெரிவித்த அவர், மற்ற நாடுகளுக்கு முன் இது நமது சுயமரியாதையை சீர்குலைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

News September 20, 2025

இட்லி, தோசைக்கு 5% GST, சாப்பாத்திக்கு No GST!

image

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்பது தமிழக அரசியலின் மையக் கருத்தாக இருந்துவரும் நிலையில், GST வரிவிதிப்பு இதை குறிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். வடமாநில உணவுகளான சப்பாத்தி, பரோட்டாவுக்கு GST-ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சூழலில், தென்னிந்தியர்கள் விரும்பி சாப்பிடும் இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவை 5% GST பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏன், இந்த பாரபட்சம் எனக் கேட்கின்றனர். உங்க கருத்து?

error: Content is protected !!