News March 27, 2025
வக்பு மசோதா மத உரிமையை பாதிக்கிறது: CM ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை முன்மொழிந்து உரையாற்றிய ஸ்டாலின், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மாநில சுயாட்சியை பாதிக்கும் என்றார். மத உரிமையை பாதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சொன்ன திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, வக்பு வாரிய மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News March 30, 2025
ஏப்ரல் 1 முதல் வரும் மாற்றங்கள்

* கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு.
* மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி ஸ்லாப்கள் அமலாகின்றன.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு பயன் தரும் UPS திட்டம் அமலாகிறது.
* பாதுகாப்புக்காக பல புதிய அம்சங்களை UPI கொண்டு வருகிறது.
* GST வரி செலுத்துவோருக்கு MFA (Multi Factor Authentication) கட்டாயமாகிறது.
News March 30, 2025
உலகில் அதிக மது அருந்தும் நாடுகள்

உலகிலேயே மால்டோவா என்ற நாட்டில்தான் மக்கள் அதிகம் மது அருந்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நாட்டில், குடிமகன் ஒருவர் சராசரியாக ஓராண்டுக்கு 500 பாட்டில் பீர் குடிக்கிறாராம். இந்தப் பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் லிதுவேனியா, செக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா இதில் 103ஆவது இடத்தில் உள்ளது. இஸ்லாமிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன.
News March 30, 2025
விஜய்யின் முடிவுக்கு சீமான் வரவேற்பு

தனித்து களம் கண்டு திமுகவை வீழ்த்துவோம் என்ற விஜய்யின் முடிவினை வரவேற்பதாக சீமான் தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியபோது, அவர் சீமானுடன் கூட்டணி சேருவார் என்று சொல்லப்பட்டது. நாளடைவில், அது பொய்த்துப் போகவே, விஜய் தனித்து தேர்தலை காணவிருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. தவெக, நாதக இரு கட்சிகளும் தனித்து களம் காண்பது யாருக்கு லாபம்?