News April 13, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய்

வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி விஜய் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
Similar News
News January 7, 2026
ஸ்டாலினுக்கு எதிராக போட்டி? விஜய்யின் முடிவு

2016 தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டவர் JCD பிரபாகர். தற்போது தவெகவுக்கு தாவியிருக்கும் அவரிடம் மீண்டும் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேர்தலில் போட்டியிடும் எண்ணத்துடன் தவெகவில் இணையவில்லை என்றார். அத்துடன், தலைமை (விஜய்) உத்தரவிட்டால் எந்த தொகுதியில் வேண்டும் என்றாலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
ஆடு, கோழிகளுக்கு உயிர் இல்லையா? SC கேள்வி

தெருநாய்கள் மேலாண்மை தொடர்பான வழக்குகளை SC விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில், நாய்களின் உரிமைகள் குறித்து நாய் ஆர்வலர்கள் வாதிட்டபோது, மற்ற விலங்குகளின் நிலை என்னவென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆடு, கோழிகளுக்கு உயிர் இல்லையா என்றும் காட்டமாக கேட்டனர். பள்ளிகள், ஹாஸ்பிடல்கள், கோர்ட்டுகள் உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு உள்ளே தெருநாய்களை அகற்றுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
News January 7, 2026
BREAKING: விலை ₹6,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் மாலையில் குறைந்துள்ளது. காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹12, கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. ஆனால், மாலையில் கிராமுக்கு ₹6 குறைந்து ₹277-க்கும், கிலோவுக்கு ₹6,000 குறைந்து ₹2,77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்குமுகத்தில் இருப்பதால், நம்மூரிலும் நாளை விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


