News April 14, 2025
வக்ஃப் சட்டம்: காங்கிரஸை கடுமையாக சாடிய PM மோடி

சொந்த நலனுக்காக வக்ஃப் விதிகளை காங். மாற்றியதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். வக்ஃப் சட்டத்தை காங். எதிர்க்கும் நிலையில், புதிய திருத்தங்கள் மூலம் வக்ஃப் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரசிற்கு இதுவரை ஏன் ஒரு இஸ்லாமிய தலைமை இல்லை என்றும், தேர்தல் தொகுதி பங்கீட்டில் 50% இஸ்லாமியர்களுக்கு ஏன் ஒதுக்கவில்லை என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.
Similar News
News January 16, 2026
கைகள் எப்போதும் ஜில்லென இருக்கிறதா? இத கவனிங்க!

குளிர்காலம் மட்டுமின்றி, சிலருக்கு எல்லா நேரங்களிலும் கைகள் ஜில்லென இருப்பது ஆரோக்கிய பிரச்னையின் அறிகுறி என்கின்றனர் டாக்டர்கள். முக்கியமாக *ரத்த ஓட்ட குறைபாடு *தைராய்டு பாதிப்பு *ரத்த சோகை *ரேனாட் நோய் பாதிப்பு *சர்க்கரை நோய் *மன அழுத்தம். தீர்வுகள்: *கையுறை அணியவும் *உடற்பயிற்சி செய்யுங்கள் *நிறைய தண்ணீர் குடிக்கவும் *மன அழுத்தத்தை குறைக்கவும் *இரும்புச்சத்து உணவுகளை சாப்பிடவும்.
News January 16, 2026
பிளிப்கார்ட், மீஷோ, அமேசானுக்கு அதிர்ச்சி

வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக உரிய அனுமதி பெறாமல் விற்பனை செய்ததற்காக அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மெட்டா உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ₹10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விதிகளின்படி, குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு மேல், வயர்லெஸ் சாதனங்களுக்கு உரிமம் மற்றும் ETA சான்றிதழ் பெறுவது கட்டாயம்.
News January 16, 2026
மின் கட்டணத்தில் மாற்றம்.. மகிழ்ச்சியான செய்தி

2026 தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக அரசு அடுத்தடுத்து புதிய திட்டங்களையும், முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறையை மீண்டும் கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறதாம். இதற்காக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு மாதாந்திர கட்டணம் படிப்படியாக அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.


