News April 5, 2025

வக்ஃப்: 2 பேர் ஆதரவு.. ஒன்னு ஜி.கே.வாசன்.. இன்னொருவர்?

image

மாநிலங்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக நியமன உறுப்பினர் இளையராஜா வாக்களித்துள்ளார். இவரைத் தவிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜி.கே.வாசன் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். அதன்படி தமிழகத்தில் 2 பேர் மட்டுமே மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அன்புமணி வாக்கெடுப்பைப் புறக்கணிக்க, திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

Similar News

News April 9, 2025

கான்வேயை வெளியேற்றிய சென்னை

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னையின் தொடக்க வீரர் கான்வே ரிட்டயர்ட் அவுட் மூலம் வெளியேறினார். 69 ரன்கள் எடுத்த அவருக்கு இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாட முடியவில்லை. ஆகையால், ரிட்டயர்ட் அவுட் மூலம் தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா களத்திற்கு வந்து தோனியுடன் இணைந்திருக்கிறார்.

News April 9, 2025

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் எப்போது? அமைச்சர் பதில்

image

கூட்டுறவு சங்கங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் 1.59 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளதாகவும், அவர்களில் 97,83,634 பேரின் ஆதார், குடும்ப அட்டை விவரம் இணைக்கப்பட்டு உள்ளது, எஞ்சியோரின் விவரம் இணைக்கும் பணி நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பணி முடிந்ததும் தேர்தல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News April 9, 2025

த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு?

image

நடிகை த்ரிஷாவின் சமீபத்திய புகைப்படங்களில், அவர் மெலிந்து காணப்படுவது பேசுபொருளாகியுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதா என ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், தீவிர உடற்பயிற்சி, டயட் முறைகளாலேயே உடல் எடை குறைந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்புக் கொண்ட படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்றார்போல் மெலிந்து காணப்படுவதாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிபடுத்தல்கள் இல்லை.

error: Content is protected !!